களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட மூவருக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
குறித்த சந்தேகநபர்கள் இன்று (07.07.2023) களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது நண்பன், நண்பனின் காதலி ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மர்மமான முறையில் மரணம்

களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் தொடருந்து பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நாகொட பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் 06.05.2023 அன்று பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்திருந்த நிலையில், பின்னர் மாடியிலிருந்து குதித்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan