மர்மமாக உயிரிழந்த களுத்துறை மாணவி! தொலைபேசியை கடலில் தேடும் பொலிஸார்
களுத்துறை விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் கையடக்கத் தொலைபேசியைக் கண்டறிவதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று (12.05.2023) பிற்பகல் களு கங்கையில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மாணவியின் கையடக்கத் தொலைபேசியைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
களுத்துறையில் உள்ள 5 மாடி கட்டிடமொன்றில் இயங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவியொருவர் கடந்த (06.05.2023) ஆம் திகதி மர்மமான முறையில் கீழே விழுந்து உயிரிழந்திருந்தார்.

களுத்துறை நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த திஹார நிர்மானி சில்வா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் கையடக்கத் தொலைபேசியை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் Cineulagam
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam