பள்ளிவாசல்களின் உதவியை நாடும் கல்முனை தலைமை பொலிஸார்
வீதி விபத்துக்களை தடுப்பதற்கான கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்களின் உதவியை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி கேட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பிரதான வீதிகளிலும் உள் வீதிகளிலிலும் வீதி விபத்துக்கள் மரணங்கள் மற்றும் படுகாயங்களும் அண்மையில் அதிகளவாக ஏற்பட்டு வருக்கின்றன.
இவ்வீதி விபத்துக்களினால் மரணம் ஏற்படுவதுடன் பாரிய காயங்கள் ஏற்பட்டு ஊனமுற்றவர்களாக பலர் காணப்படுகின்றனர்.
இதனால் அவர்களின் குடும்பங்கள் பாரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றது.அத்துடன் ஏனைய பொதுமக்களுக்கும் சிரமங்களும் ஏற்படுகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கை
ஆகையால் இவ்வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக சமூக உணர்வுடன் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்களின் ஒத்துழைப்பினை கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே தாங்கள் வீதி விபத்துக்களில் இருந்து மீளுவதற்காக வாகனங்களை நல்ல முறையில் பராமரிப்பதோடு அவ்வாகனங்களுக்குரிய ஆவணங்களை உரிய காலங்களில் பெற்றுக் கொண்டு வீதி விதி முறைகளை முறையாக பேணுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
சாரதி என்ற வகையில் பொறுமையை பேணுமாறும் மேலும் தங்களது பிள்ளைகளுக்கு உரிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதுடன் மோட்டார் சைக்கிளை இளம் சிறார்களுக்கு கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.
அத்துடன் உள் வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்தும் போது கட்டாயமாக பிரயாணம் செய்பவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்வதுடன் தவறும் பட்சத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam