45ஆவது நாளாகவும் தொடரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம்

Ampara Jaffna Sri Lanka Kalmunai
By Farook Sihan May 09, 2024 09:19 AM GMT
Farook Sihan

Farook Sihan

in சமூகம்
Report

அம்பாறை (Ampara) - கல்முனை  வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்  நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக  45 ஆவது  நாளாகவும் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 45 ஆவது நாளான நேற்றைய தினமும் (08.05.2024) பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மைத்திரியின் வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்ட பொலிஸார்

மைத்திரியின் வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்ட பொலிஸார்

கவனயீர்ப்பு போராட்டம்

எனினும், கடந்த தினங்களை விட குறைந்தளவான மக்களே நேற்றைய போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து ஏற்பாட்டாளர்களும் பொதுமக்களும் பல்வேறு பிரச்சினைகளை தற்போது எதிர்கொண்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

45ஆவது நாளாகவும் தொடரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் | Kalmunai North Division Secretariat Protest

மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988 ஆம் ஆண்டுகளில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருந்த போதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

45ஆவது நாளாகவும் தொடரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் | Kalmunai North Division Secretariat Protest

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்குகின்ற நிர்வாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.

45ஆவது நாளாகவும் தொடரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் | Kalmunai North Division Secretariat Protest

மேற்குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது அம்பாறை - கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் யுக்திய நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் யுக்திய நடவடிக்கை முன்னெடுப்பு

அதிகரிக்கும் வெப்பநிலை: அழிவடையும் அபாயத்தில் இலங்கை கடற்பரப்பில் உள்ள பவளப்பாறைகள்

அதிகரிக்கும் வெப்பநிலை: அழிவடையும் அபாயத்தில் இலங்கை கடற்பரப்பில் உள்ள பவளப்பாறைகள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US