கல்முனை மாநகர சபை நிதி மோசடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (Photos)
தேசிய மக்கள் சக்தியின் கல்முனை செயற்பாட்டாளர்களினால் கல்முனை மாநகர சபையில் வரிப்பண மோசடியுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் கல்முனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் நேற்றைய தினம் (13.03.2023) நடைபெற்றுள்ளது.
கல்முனை மாநகரசபையில் இடம் பெற்ற நிதி மோசடி மற்றும் மின்சாரக்கட்டண அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, தேர்தலை பிற்போடல், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்போராட்டமானது தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் பொதுமக்கள் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam