யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள்

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Theepan Sep 22, 2026 05:57 AM GMT
Report

கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், எரிந்து கொண்டிருக்கும் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல், உக்கும் கழிவுகளை மாத்திரம் சேகரித்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (21.09.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து, மாலை அதிகாரிகள் கல்லுண்டாய் பகுதிக்கு நேரடி களவிஜயம் மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.

இதன்போது, கழிவு முகாமைத்துவத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பல்வேறு உடனடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் | Kallundai Waste Management

பாதுகாப்பு வேலியின் பணி

15 அடி உயர பாதுகாப்பு வேலி கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியைச் சுற்றி யாழ்ப்பாண மாநகர சபையினால் அமைக்கப்படும் 15 அடி உயர பாதுகாப்பு வேலியின் பணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் நிறைவடையும் வரை, நவம்பர் 30ஆம் திகதி வரை இரவு நேரங்களில் பொலிஸாரின் கண்காணிப்பும், பகல் நேரங்களில் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலமான கண்காணிப்பும் முன்னெடுக்கப்படவுள்ளன.

20 சிசிடிவி கண்காணிப்பு கமராக்கள் கல்லுண்டாய் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் மொத்தம் 20 சிசிடிவி கமராக்களைப் பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 16 கமராக்களையும் நவம்பர் மாத இறுதிக்குள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் | Kallundai Waste Management

எரியும் கழிவுகளை அணைக்க இராணுவ உதவி கல்லுண்டாய் பகுதியில் தற்போது எரிந்து கொண்டிருக்கும் கழிவுக் குவியல்களை இராணுவத்தினரின் உதவியுடன் அணைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குப்பை எரியூட்டல் காரணமாக அப்பகுதி மக்கள் புகைமூட்டத்தினால் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், இவ்வாறான சம்பவங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் 10 நீர்த்தாங்கிகளை நவம்பர் மாதத்திற்கு முன்னர் பொருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்கான இடிதாங்கி வசதியையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

உக்கும் கழிவுகளை மட்டும் சேகரிக்க புதிய ஏற்பாடு கல்லுண்டாய் பகுதியில் கழிவுகளைக் கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட காணியின் முன்பகுதியில் ஒரு பகுதியை இராணுவத்தினரின் இயந்திர உதவியுடன் சுத்தப்படுத்தி, உக்கும் கழிவுகளை மாத்திரம் சேகரிக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட இடமாகப் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் | Kallundai Waste Management

அப்பகுதி மக்களின் பங்கேற்புடன் கொண்டுவரப்படும் கழிவுகள் பரிசோதிக்கப்பட்டு, அவை உக்கும் கழிவுகளா என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே குறித்த இடத்தில் சேகரிக்கப்படும். உக்காத கழிவுகள் கொண்டுவரப்பட்டால், அவற்றை யாழ்ப்பாண மாநகர சபையினால் மீள எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

பொதுமக்களுக்கும் மேற்பார்வை செய்ய அனுமதி கல்லுண்டாய் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை நேரடியாக மேற்பார்வை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக அப்பகுதி மக்களிடமிருந்து 10 பேரின் பெயர்ப் பட்டியலைப் பெற்று, அவர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் வழங்கி, குறித்த பகுதியை மேற்பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் கல்லுண்டாய் பகுதியில் கிடைக்கப்பெறும் சேதனக் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இதற்காக காணியின் ஒரு பகுதியை நிரந்தரமாக வழங்குமாறு கோரி, யாழ்ப்பாண மாநகர சபையினால் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பப்படவுள்ளது.

இவ்விடயம் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் | Kallundai Waste Management

மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல்

அனர்த்த அபாய அறிக்கை – இரண்டு வாரங்களில் கல்லுண்டாய் பகுதியில் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்து, அவசரநிலை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை யாழ்ப்பாண மாநகர சபைக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் இணைந்து நிலையான தீர்வை நோக்கி கல்லுண்டாய் பகுதியில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடைமுறைச் சாத்தியமானதும் நிலையானதுமான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அவசரமாகவோ அல்லது ஒரு தரப்பினரின் கருத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டோ தீர்மானங்களை மேற்கொள்வது பொருத்தமானதல்ல எனக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்று ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் | Kallundai Waste Management

கழிவு முகாமைத்துவத்தை ஒருமுறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக மட்டுப்படுத்தாமல், பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நீண்டகால அடிப்படையில் நிலையான செயற்றிட்டமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரிகள் நேரடி களவிஜயம் கல்லுண்டாய் பகுதியில் நிலவும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலைமைகளை நேரில் பார்வையிட்டு ஆராய்வதற்கும், அப்பகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கும் இன்று மாலை 5 மணியளவில் அதிகாரிகள் களவிஜயம் மேற்கொண்டனர்.

இதில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர், மாநகர சபை பிரதி முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மாநகர சபை ஆணையாளர், பொறியியலாளர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை முறையாகவும் பாதுகாப்பாகவும் முன்னெடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை உரிய காலவரையறைக்குள் நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் | Kallundai Waste Management

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US