காக்கைதீவு மீள் சுழற்சி மையத்தால் பிரச்சினை - மாநகர சபை முன் போராட்டத்தில் குதித்த மக்கள்
காக்கைதீவு மீள் சுழற்சி மையத்தால் தாங்கள் தினமும் இன்னல்களை எதிர்கொள்வதாக தெரிவித்து, அதற்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றையதினம்(15.07.2026) காக்கை தீவு மக்கள் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.
கொட்டப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்படுவதில்லை
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாம் இந்த குப்பை மேட்டால் அன்றாடம் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளுகிறோம்.
குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

அங்கே கொட்டப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்படுவதில்லை. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்டு மாநகர சபையானது காணப்பட்ட போது தரமான கழிவு முகாமைத்துவம் பேணப்பட்டது.
கழிவுப் பொருட்கள் மூலம் சேதனப் பசளை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இவ்வாறான மனிதத்துக்கு ஒவ்வாத பிரச்சினைகள் இடம்பெறுகின்றன.

கழிவுகளை எரிக்கிறார்கள். இதனால் அருகில் இருக்க முடிவதில்லை. இந்த பிரச்சினைக்கு முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வெளியே வந்து எமக்கு தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மாநகர சபைக்கு உள்ளே செல்ல வேண்டி ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri