தாஜுதீன் கொலை தொடர்பில் முக்கிய தகவல் அம்பலம்
முன்னாள் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் மித்தெனிய பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கஜ்ஜா எனப்படும் அருண சாந்த என்பவருக்கு இந்த கொலை முயற்சியுடன் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் அவரை பின்தொடர்ந்து சென்ற வாகனத்தில் கஜ்ஜா இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல பாதாள உலக குழு உறுப்பினர்களில் ஒருவரான பெக்கோ சமன் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கஜ்ஜாவை பெக்கோ சமன் கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கஜ்ஜாவின் மனைவியும் இந்த கொலைக்கு பெக்கோ சமான் தொடர்பு பட்டிருந்தார் என பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை அடித்திருந்தார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் முன்னாள் ரக்பி வீரர் தாஜுதீன் கொலையுடன் கஜ்ஜா என்ற நபருக்கு தொடர்பு இருப்பதாக ஊகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
தாஜுதீன் கொலை
சம்பவம் இடம்பெற்ற தினம் தாஜுதீன் சாலிகா மைதானத்திற்கருகாமையில் பல்பொருள் அங்காடி ஒன்றில் தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கும் காட்சிகள் சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
அவ்வாறு அவர் தண்ணீர் போத்தலை வாங்கிக் கொண்டு வாகனத்தில் ஏறும்போது அவரது வாகனம் பின் தொடரப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
அவ்வாறு பின் தொடர்ந்த வாகனத்தில் இருந்த நபரே இந்த ஹஜ்ஜா என தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இந்த காட்சிகள் வெளியிடப்பட்டாலும் சந்தேக நபர் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இந்த காட்சிகளில் இருப்பது தமது கணவர் என கஜ்ஜாவின் மனைவி தெரிவித்துள்ளார்.
தம்முடன் 17 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருந்தவரின் அங்க அசைவுகள் அங்க அடையாளங்கள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இது கஜ்ஜா என்பதை தான் உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்கள்! சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
வாகன விபத்து
இதேவேளை, தாஜுதீனின் உடல் பாகங்களில் சில பகுதிகளை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றார்.
வாகன விபத்தினால் தாஜுதீன் உயிரிழக்கவில்லை அது ஓர் கொலை என்பதை வெளிப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கஜ்ஜா என்பவர் உயிருடன் இருந்த போது இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தாஜுதீன் கொலை யுடன் அரசியல் வாதிகளுக்கு தொடர்பு உண்டு என்ற வகையிலான தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



