கார் அனுமதி இரத்து விவகாரம்! எதிர்ப்பை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம்
வாகனங்களின் முன் கண்ணாடியில் காட்சிப்படுத்தப்படும் சட்டத்தரணிகளுக்கான வாகன அனுமதி அட்டைகளை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பின் படி சட்டத்தரணிகளின் அனுமதி அட்டைகளை அகற்றுவது சட்டத்திற்கு முரணானது என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
சட்டத்தரணிகளின் அனுமதிகளை இரத்துச் செய்வது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுரயா கல்ஹேனா ஆகியோரால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வாகன அனுமதி
அனுமதி அட்டைகளை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி உத்தரவின் நோக்கம் சட்டத்தரணிகள் வாகனங்களுக்கு பொருந்தாது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் எந்த விதிகளையும் அவை மீறவில்லை என்பதை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
தங்களின் உறுப்பினர்களுக்கு அனுமதி அட்டைகளை வழங்கும் தற்போதைய முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்று நம்புவதாககவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கிறது.
அதன்படி, இந்த அனுமதிகளின் முக்கியத்துவத்தை விளக்கும் பின்வரும் காரணங்களை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
* இந்த அனுமதி அட்டைகளை , நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நீதி நிர்வாகம் தொடர்பான பிற நிறுவனங்களுக்குள் நுழையும்போது சட்டத்தரணிகளை அடையாளம் காண உதவுகின்றன.
*வாகனங்கள் சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் நுழைவதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாக காணப்படுகிறது.
*இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 28 ஆண்டுகளாக, அதாவது 1997 முதல் இந்த வருடாந்த அடையாள அனுமதி அட்டைகளை வழங்கும் நடைமுறையை பேணி வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



