இனப்படுகொலையாளிகளுக்கு ஆதரவளித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன் : கஜேந்திரன்
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையாளிகளுக்கு சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் ஆதரவளித்தமையினாலேயே வடக்கு - கிழக்கில் சுயநிர்ணய உரிமையை நாமல் போன்றோர் பகிரங்கமாக மறுக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று (24) அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தெளிவூட்டும் துண்டுபிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவேளை ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "75 வருடங்களாக தமிழருக்கு உரிமை வழங்க மாட்டோம் என்று பேரினவாதிகள் கூறி வருகின்றார்கள். குறிப்பாக பேரினவாதிகள் சிங்கள மக்களுக்கு இவ்வாறாக கருத்துக்களை கூறி வருகின்றார்கள்.
அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது ஒரு பௌத்த நாடு. சிங்கள நாடு. இதை பேணி பாதுகாப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அது மட்டுமன்றி வடக்கு - கிழக்கில் 1000 பௌத்த விகாரை அமைப்பதாகவே கூறி வருகின்றனர். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமும் அவ்வாறு தான் இருந்திருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |