போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக தடை செய்யப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்
தென்ஆபிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடா மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ககிசோ ரபாடா(Kagiso Rabada) ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
குஜராத் அணி
முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், சொந்த காரணத்திற்காக உடனடியாக தென்ஆபிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இதுவரை குஜராத் அணி 10 போட்டிகளில் விளையாடியுள்ளது.
இந்த நிலையில் போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்துள்ளது.
இதனால் தடை பெற்றுள்ளேன். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ககிசோ ரபாடா எனத் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட காலம்
இது தொடர்பாக ரபடா வெளியிட்டுள்ள அறிக்கையில்

''நான் ஏமாற்றிய அனைவருக்கும் நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாடும் பாக்கியத்தை நான் ஒருபோதும் அற்பமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த பாக்கியம் என்னை விட மிகப் பெரியது.
இது எனது தனிப்பட்ட விருப்பங்களை விட அதிகம். நான் தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், நான் விளையாட விரும்பும் விளையாட்டுக்குத் திரும்புவதை எதிர்நோக்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட காலம் குறிப்பிடப்படாத நிலையில், ஐபிஎல் தொடரின் குஜராத் அணி விளையாட உள்ள எஞ்சியுள்ள போட்டிகளில் ரபாடா பங்கேற்பாரா இல்லையா என தற்போது வரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்குடன் ஆரம்ப உடன்படிக்கையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- ஜனாதிபதி விளக்கம்
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri