பயிற்சி வகுப்பிற்கு சென்று தந்தையுடன் வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்!
கடுகஸ்தோட்டையிலிருந்து நவயலத்தேனை நோக்கி ஜம்புகஹபிட்டிய வீதியில் பயணித்த வான் ஒன்று திடீரென பிரேக் செயலிழந்தமையினால் ஏற்பட்ட விபத்தில் 14 வயதுடைய மகளும் 47 வயதுடைய தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு - ராஜகிரிய பிரதேசத்தில் வசிப்பவர்கள் கட்டுகஸ்தோட்டை ஜம்புகஹாபிட்டியவில் உள்ள மரண வீடொன்றிற்கு சென்றுவிட்டு கம்பளை பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவி தனது தந்தையுடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தந்தையும்,மகளும் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
பொல்கொல்ல பல்லேகுன்னபன பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் மூன்று பிள்ளைகளின் தந்தையான ரோஹன ஜயந்த (47) மற்றும் அவரது இளைய மகள், கடுகஸ்தோட்டை சமுத்திராதேவி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய மதுஷி மேகலா தனஞ்சனா ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam