வன்னியில் ஜனாதிபதி அதிக வாக்குகளை பெறுவார்: காதர் மஸ்தான் உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வன்னி தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார். நாடும் மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இன்று (13.09.2024) மதியம் மன்னார் பஜார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு கோரி இன்றையதினம் மன்னார் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டேன்.
பிரசார நடவடிக்கை
மன்னார் நகரத்தை பொறுத்தமட்டில் வியாபாரிகளும், மக்களும், கல்வியாளர்களும் மிகவும் தெளிவாகவே இருக்கின்றார்கள். தற்போதைய நிலையில் இருந்து சற்று இந்த நாடு முன்னேறி பொருளாதாரம் மேம்பட வேண்டுமாக இருந்தால் தற்போதைய ஜனாதிபதி மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க, மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என மக்களும் வர்த்தகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். மக்கள் உண்மையில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கின்றனர்.
இதற்கமைய, மக்களின் அமோக வரவேற்பு எங்களுக்கு கிடைக்கிறது. ரணில் விக்ரமசிங்க, வன்னி தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார். அதேபோன்று தேசிய ரீதியிலும் அதி கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார்.
எதிர்வரும் 22ஆம் திகதி தேர்தல் வெற்றி அறிவிப்பின் போது அதிகூடிய வாக்குகளுடன் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அறிவிக்கப்படுவார் என்பது மக்கள் எமக்கு வழங்கும் ஆதரவு மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த நாடும் மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணிலின் சின்னமான கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
