கச்சதீவு விவகாரம்: மோடி அரசாங்கத்திற்கு ஸ்டாலின் பதிலடி
இந்திய அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியள்ள கச்சதீவு(Kachchatheevu) விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(M. K. Stalin) கடுமையாக சாடியுள்ளார்.
திட்டமிட்டே தேர்தல் காலத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் இலாபம் பெற பாரதிய ஜனதா கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழா ஒன்றின் போது, பிரதமர் மோடி முன்னிலையில், கச்சதீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற வகையில் தான் கோரிக்கை விடுத்ததாகவும், 10 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இரட்டை வேடம்
மேலும், “கடந்த 2015 ஜனவரி 27ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) தலைமையிலான இதே பா.ஜ.க ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தார். இப்போது அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சதீவை நேரு, இந்திராகாந்தி போன்ற முன்னாள் பிரதமர்கள் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாகவும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதனை எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து கச்சதீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது பா.ஜ.க தான் என்பதும், திட்டமிட்டே தேர்தல் நேரத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும்.
இந்த விவகாரம் விசுவரூபமும் எடுக்கவில்லை. வேறு எந்த ரூபமும் எடுக்கவில்லை. 10 ஆண்டுகால சாதனைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொல்வதற்கு ஒற்றைச் செங்கல்லை தாண்டி வேறு எதுவும் இல்லாத பா.ஜ.க வில் பிரதமர், நிதி அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சரில் ஆரம்பித்து சிறிய அரசியல்வாதிகள் வரை கச்சதீவு பற்றிய வதந்திகளை பரப்பிக் கதறுகிறார்கள்.
தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு
இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது இந்தித நாடாளுமன்ற விவாதங்களிலும், சட்டமன்றத் தீர்மானத்திலும், மத்திய மந்திரிகளுடன் கருணாநிதி நடத்திய ஆலோசனைகள் பற்றிய குறிப்புகளிலும் தெளிவாக உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவிலும் பிரதமர் முன்னிலையில் கச்சதீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை வைத்தேன்.
10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் இம்மியளவில்கூட செயல்படவில்லை. இலங்கைத் தலைநகர் கொழும்பில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற அந்நாட்டு அரசின் நாடாளுமன்ற கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அந்நாட்டு அமைச்சர் பந்துல குணவர்த்தன, “
கச்சதீவு விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. ஏனெனில் அந்த பிரச்சனை ஒருபோதும் எழுப்பப்படவில்லை" என்று தெரிவித்திருந்ததை இந்திய தமிழ் பத்திரிகையொன்றின் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இதில் இருந்தே கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




