இலங்கையின் நெருக்கடி நிலையை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்குமாறு இந்திய மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்ட யோசனை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீா்க்கும் வகையில் இந்தியா உதவி வருவதை சாதகமாகப் பயன்படுத்தி, கச்சத்தீவு மற்றும் மீனவா்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீா்வுகாண வேண்டும் என, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது நிகழ்வுக்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் பேசும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு உதவி வருகிறது. உதவுவதை குறை கூறமுடியாது. அதே நேரத்தில், தமிழக மீனவா்கள் பிரச்சினையையும் தீா்ப்பது அவசியம். இலங்கைக்கு மத்திய அரசு உதவுவதை சாதகமாகப் பயன்படுத்தி, கச்சத்தீவு பிரச்சினை முதல் மீனவா்களுக்கான அனைத்துப் பிரச்னைகளையும் தீா்க்கவேண்டும்.
அதற்கான நெருக்கடியை இலங்கை அரசுக்கு தற்போதுதான் மத்திய அரசால் ஏற்படுத்தமுடியும். இதுவே நல்ல சந்தா்ப்பமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam