இராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் புறக்கணிப்பு: யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் கருத்து
இராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் புறக்கணிப்பு காரணமாக படகு சேவைகள் இடம்பெறாததால், கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவிற்கு வர விரும்புகின்ற யாத்திரிகர்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (21.02.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது, எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் பங்குத்தந்தையின் உறுதி
இந்நிலையில், தடைகளை மீறி யாத்திரிகர்களை கச்சத்தீவிற்கு அனுப்பி வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இராமேஸ்வரம் பங்குத்தந்தை உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam