யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் பெறுமதியான உணவு பொதி
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதிகள் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணிவர்களை சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இக் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இடைக்கால நிவாரண உதவியாக 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதியை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றது.
அதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் இன்றுவரை சுமார் 7251 குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெறுமதி கொண்ட உணவு பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் காலத்தில் எமக்கு உரிய விபரங்கள் கிடைக்க பெற்றவுடன் அவர்களுக்கு அது கிடைக்கும் அதாவது விபரங்கள் கிடைக்கப்பெறுவதன் அடிப்படையிலேயே உதவிப் பொருட்களை வழங்க முடியும்.
இந்த விடயம் தொடர்பில் சகல பிரதேச செயலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் எம்மால் வழங்கப்பட்டுள்ளன. எனவே தனி தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri