நாட்டில் பொருளாதார நெருக்கடி! இலங்கையில் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை
மக்களை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதாரத்தின் தாக்கங்களினால் இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என்ற வாதம் பொய்யானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலைமைகளில் அநேகமான நாடுகளின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக அரசாங்கம் காரணம் கூறக்கூடிய சாத்தியம் உண்டு.
கோவிட் பெருந்தொற்று, வறட்சி போன்ற காரணிகளினால் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டதாக அரசாங்கம் மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்கிறது.
ஜனாதிபதியோ, நிதி அமைச்சரோ மக்களை தொடர்ந்தும் பிழையாக வழிநடத்த முடியாது.
தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க அணி திரள வேண்டும் என அவர் நாட்டு மக்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam