அநுரவின் கட்சி ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கும் : வஜிர அபேவர்தன
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அநுரகுமாரவின் கட்சி, தற்போதைய ரணில் அரசுடன் இணைந்து செயற்படும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
"தேசிய மக்கள் சக்தி, உலகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல விடயமாகும். நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தமது பங்களிப்பை வழங்கும்.
இது புதிய விடயம் ஒன்றல்ல. கடந்த காலத்திலும் தேசிய மக்கள் சக்தியான ஜே.வி.பி. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

நிறுவனங்களின் செயற்பாடுகள்
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசுக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியுள்ளது. அந்தவகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கும் ஜே.வி.பியின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும்." - என்றார்.
இதேவேளை, இந்தியாவுக்கான விஜயம் மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அங்கு பல தரப்பினரையும் சந்தித்ததுடன் பல நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.
you may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan