ஜே.வி.பி ஏனைய கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொள்ளாது:உறுதி என்கிறார் லால் காந்த
உறுதியாக தமது கட்சி வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால் காந்த (K.D.Lal Kantha) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், வேறு கட்சிகளில் அங்கம் வகிக்கும் முற்போக்கானவர்கள் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைய முடியும் எனவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இவ்வாறு இணையும் நபர்களை பரீட்சைக்கு உட்படுத்திய பின்னரே அவர்களை கட்சியில் இணைத்துக்கொள்வோம் எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள் மீதுள்ள நம்பிக்கை முற்றாக இழந்த நிலையிலேயே மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து வருகின்றனர். இந்த நேரத்தில் தேசிய மக்கள் சக்தி, வேறு கட்சிகளை தம்முடன் இணைத்துக்கொண்டால், மக்கள் மறுபக்கம் திரும்புவார்கள்.
மக்களுக்கு செல்ல திசையில்லாமல் போகும். மக்கள் இதனை விரும்பவில்லை. மக்கள் ஏனைய கட்சிகளை கைவிட்டு வருகின்றனர்.
இப்படியான நேரத்தில் நாம் ஏன் அந்த கட்சிகளை சென்று அணைத்துக்கொள்ள வேண்டும்.
இதனால், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்திற்குள் இருந்து நாளைய தினம் வெளியேறும் கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை அமைக்க மாட்டோம் என உறுதியாக கூறுகிறேன் எனவும் லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan