இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அனுரகுமார
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் குறித்த சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை மெற்கொண்டுள்ளார்.
எங்கள் இருதரப்பு உறவுகள் குறித்தும் அதனை மேலும் வலுப்படுத்துவதால் உருவாகக்கூடிய பரஸ்பர நன்மைகள் தொடர்பிலும், இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சவால்
இலங்கையின் பொருளாதார சவால்கள் முன்னோக்கிய பாதை குறித்தும் ஜேவிபி தலைவருடனான பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
Pleased to meet @anuradisanayake, Leader of NPP and JVP of Sri Lanka this morning.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 5, 2024
A good discussion on our bilateral relationship and the mutual benefits from its further deepening. Also spoke about Sri Lanka’s economic challenges and the path ahead.
India, with its… pic.twitter.com/5cJJwaTB3o
அத்தோடு, இந்தியா தனது அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கை காரணமாகவும் சாகர் கொள்கை காரணமாகவும் இலங்கையின் நண்பனாகவும் நம்பகதன்மை மிக்க சகாவாகவும் விளங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |