நல்லாட்சி அரசாங்கமும் ஜே.வி.பியும் பொருளாதார நெருக்கடியின் பங்காளிகள்-கம்மன்பில
நல்லாட்சி அரசாங்கமும் மக்கள் விடுதலை முன்னணியும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பங்காளிகள் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை கடன் பொறியில் சிக்க வைத்த நல்லாட்சி அரசாங்கம்

பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. எனினும் இதில் இருந்து மீள்வதற்கான வேலைத்திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் தவறியுள்ளது.
அரசாங்கம் மாத்திரமல்ல, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் இதுவரை பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான தீர்வை முன்வைக்க தவறியுள்ளன.
கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் அதிக வட்டிக்கு 12 பில்லியன் டொலர்களை கடனாக பெற்று நாட்டை கடன் பொறிக்குள் சிக்க வைத்தனர்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச வேலைகளை வழங்குமாறு அழுத்தம் கொடுத்தும், நாடு தாங்கிக்கொள்ள முடியாத நிவாரணங்களை வழங்குமாறு அழுத்தம் கொடுத்து நாடு இந்த நிலைமைக்கு செல்ல ஜே.வி.பியும் காரணம்.
இதனால், அரசாங்கத்தை போல் அனைத்து கட்சிகளும் இந்த பொருளாதார நெருக்கடியின் பங்காளிகள் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam