ஜே.வி.பி. ஆட்சியமைத்தால் 25 அமைச்சர்கள் தான்! - அநுரகுமார தெரிவிப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் அரசின் கீழ் 25 அமைச்சரவை அமைச்சர்களும், 25 பிரதி அமைச்சர்களும் மாத்திரமே இருப்பர் என அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அந்த அரசின் கீழ் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் நிபுணர்கள் குழுவிடம் கையளிக்கப்படும் எனவும், அமைச்சரவை நாட்டை நிர்வகிக்கும் எனவும் அவர் கூறினார்.
சுகாதாரத்தை நளிந்த ஜயதிஸ்ஸ, நிஹால் அபேசிங்க போன்றவர்கள் கொண்ட குழுவும், பொருளாதாரத்தை சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க போன்றவர்களும் கட்டுப்படுத்துவார்கள் எனவும் அவர் கூறினார்.
ஜே.வி.பி.யின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, தாம் நாட்டின் ஜனாதிபதியானால் அரசியல்வாதிகளின் அனைத்து
சிறப்புரிமைகளும் இல்லாதொழிக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
முறைமை இல்லாதொழிக்கப்படும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தொலைக்காட்சி
கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam