சிறையில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு வந்த அழைப்பு - பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
எதிர்க்கட்சி தலைவர் நாமல் ராஜபக்சவை தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பிணை பெறுவதற்காக நாமல் ராஜபக்ச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
சிறையில் இருக்கும் நாமல் ராஜபக்சவிற்கு எசல பெரஹெரவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் சமூகமளிக்காவிட்டால் அது அழைப்பை அவமதிப்பதாக அமையும் என அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை ஒரு காரணமாக முன்வைத்து நாமல் ராஜபக்சவிற்கு பிணை கோரப்பட்டுள்ள போதிலும், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. அத்துடன், நிமல் பெரேரா அளித்த வாக்குமூலம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, நிமல் பெரேராவின் வங்கிக் கணக்கிற்கு மேலும் பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச வழக்கின் பின்னணியில் இடம்பெறும் பரபரப்பான விடயங்கள் என்ன? பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் பின்னணி என்ன? உள்ளிட்ட பல தகவல்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது “நியூஸ் இன்சைட்” நிகழ்ச்சி,