மன்னாரில் இடம்பெற்ற ஜே.வி.பி கட்சியின் மக்கள் சந்திப்பு
மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கும் (ஜே.வி.பி) இடையிலான மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு நேற்று (25) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி)கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார்.
இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரமாண்ட வரவேற்பு வழங்கினர். குறித்த மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மன்னார் மாவட்ட மக்கள் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
