அரசாங்கத்தின் புகழ் வேகமாகக் குறைந்து வருகிறது : தேசிய மக்கள் சக்தி
இலங்கை அரசாங்கத்தின் புகழ் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக குறைந்து வருவதாக தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று தெரிவித்துள்ளது.
எனவே பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப பல்வேறு சூழ்ச்சிகளை அரசாங்கம் பயன்படுத்துகிறது.
இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஆணையுடன் பதவிக்கு வந்த வேறு எந்த அரசாங்கமும், இந்தளவு குறுகிய காலத்திற்குள் தனது பிரபலத்தை இழக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு வருடங்கள் முடிவதற்குள் இந்த அரசாங்கத்தின் புகழ் குறைந்துவிட்டது. பல்வேறு துறைகளில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
எரியும் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பல்வேறு சூழ்ச்சிகளை, அரசாங்கங்கள் கையாள்வதை கடந்த 73 ஆண்டுகளாகப் பார்க்க முடிகிறது.
தற்போது இந்த அரசாங்கம், இப்போது அதே தந்திரத்தையே பயன்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
ஜனநாயக நோக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில் இனவாதம் மத தீவிரவாதத்தை தூண்டி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
உயிா்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மற்றும் கருத்து தெரிவிப்பவர்கள் மீது தனி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த அருட்தந்தை .சிறில் காமினியை அரசியல்வாதிகள் மற்றும் மத தலைவர்கள் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து அவரை கைது செய்து சதி செய்து வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு பாரபட்சமாக செயல்படுவோர் மீது வேறு ஒரு சட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எனினும் அரசாங்கத்துடன் நெருங்கியவா்களின் வழக்குகள் வியக்கத்தக்க வகையில் திரும்பப் பெறப்படுகின்றன என்றும் ஹாினி அமரசூரிய சுட்டிக்காட்டினாா்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri