தமிழ் சினிமா பாணியை கடைப்பிடிக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள்..!
சட்டத்தை சரியாக நிலைநிறுத்துவார்கள் என்று எண்ணிதான் மக்கள் ஜேவிபிக்கு வாக்களித்தனர் என்று சமூக செயற்பாட்டாளர் டேனிஷ் அலி தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக காணொளியிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பல நோய்கள் இருப்பதாக கூறியே அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
எனினும் பிணை வழங்கிய இரண்டாவது நாள் அவர் வீட்டிற்கு திரும்பினார். இந்தவிடயங்கள் எல்லாம் தமிழ்சினிமாவில் குற்றவாளிகளை கைது செய்ததும் அவர்கள் வைத்திய சாலையில் தஞ்சமடையும் காட்சி போல உள்ளது.
அப்படியில்லாமல் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். இதற்காகதான் மக்கள் மக்கள் ஜேவிபிக்கு வாக்களித்தனர் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri