கனேடிய பிரதமரின் பதவி விலகலை வரவேற்ற எலான் மஸ்க்
கனடாவின் (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது பதவியில் இருந்து விலகியமையை வரவேற்கும் வகையில் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் (Elon Musk) செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
சர்வதேச தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளையும் மாற்றங்களையும் குறிக்கும் வகையில் அந்த பதிவு இடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு...
குறித்த பதிவில், ட்ரூடோவின் பதவி விலகல் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ள நிலையில், 2025 அருமையாக காட்சியளிக்கிறது என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, அந்த பதிவில், ட்ரம்ப் வெற்றி பெற்றுவிட்டார், கெய்ர் ஸ்டார்மரைக் குறித்த உண்மை வெளிவந்துவிட்டது, சரியான நேரத்தில் மாபெரும் மனிதர்கள் அதிகாரத்துக்கு வருகிறார்கள், நமக்கு அவர்கள் எல்லாரும் தேவை என்று கூறி, உலக நிகழ்வுகள் பல வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
2025 is looking good 🔥 🚀 😎 https://t.co/qhVMzzy3yW
— Elon Musk (@elonmusk) January 6, 2025
ஏற்கனவே, ட்ரம்ப், ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என்றும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும் கேலி செய்துவரும் நிலையில், தற்போது எலான் மஸ்கும் இவ்வாறான ஒரு பதவினை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
