படுதோல்விக்கான சாத்தியம்! பதவி விலக தயாராகும் ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இறுதியான தீர்மானத்தை அவர் இன்னும் எடுக்கவில்லை என்றாலும், அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
எனினும், ட்ரூடோ எப்போது தனது பதவியிலிருந்து விலகுவார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளிவரவில்லை.
பதவி விலகல்
எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை(08.01.2025) லிபரல் கட்சியின் கூட்டத்தில் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தற்போது ஆட்சியில் உள்ள லிபரல் கட்சியின்(Liberal Party) தலைவர் ட்ரூடோ, தொடர்ச்சியாக ஒன்பது வருடங்கள் பிரதமர் பதவியை வகித்து வருகின்றார்.
எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சி பிரதான எதிர்கட்சியான கன்செர்வ்டிவ்(Conservatives) கட்சியிடம் படுதோல்வி அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையிலேயே, ட்ரூடோ, பதிவி விலகல் குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |