முல்லைத்தீவு நீதிபதி மீதான அச்சுறுத்தல் ஜனநாயகத்தை பாதிக்கின்றது: ஸ்ரீநேசன் விசனம்(Video)
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கிய விடயம் நாட்டின் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்
தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று (29.09.2023) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி குருந்தூர் மலை விடையத்தில் மிகவும் காத்திரமாக செயற்பட்டிருந்தார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் மிகவும் காராசாரமான முறையில் விமர்சனம் செய்திருந்தார் என கூறியுள்ளார்.
நாட்டில் இருக்க முடியாத நிலை
மேலும் தெரிவிக்கையில்,
“அந்த விமர்சனம் நீதித்துறைக்கு பாதிப்பாக அமைந்திருந்தது மட்டுமலாமல் குறித்த நீதிபதியையும் மிகவும் மன அழுத்தம், மற்றும் அச்சுறுத்தலையும் விடுக்கக் கூடிய வித்தில் அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து நீதிபதி பல மன அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருக்கின்றார் என நினைக்கின்றேன்.
இதன் காரணமாக அவர் இந்த நாட்டில் இருக்க முடியாத நிலையில் வெளிநாடான்றிற்குச் சென்றிருக்கின்றார். இது நீதித்துறை, மனித உரிமை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சி முறையைப் பாதிக்கின்றது.
இதற்கமைய நாடு பொருளாதாரத்தில் வங்குரோத்து அடைந்திருக்கின்றது. வெளிநாடுகளில் கைகட்டி நாங்கள் நிற்கின்றோம். இப்போது ஜனநாயக அரசியலும் வங்குரோத்து அரசியலுக்குள் தள்ளப்பட்டுள்ளது போல் தெரிகின்றது.
மேலும், மக்கள் பாதிக்கப்படுகின்றபோது இறுதியாக நாடுகின்ற ஒரே ஒரு இடம் நீதித்துறையாகும். நீதித் துறையில் மாத்திரம்தான் அரசியல் கலப்பு இல்லை என மக்கள் செயற்படுகின்றார்கள்.
நாட்டை விட்டு மக்கள் ஓடுகின்ற நிலமை
இந்நிலையில், அந்த நீதித் துறையை கௌரவமாக பேணவேண்டிய பொறுப்பு அரசாங்கம், ஜனாதிபதி, நீதியமைச்சு ஆகியவற்றுக்கு இருக்கின்றது.
அத்துறையில் இருந்து சுயாதீனமாக தமது கடமையை செய்யமுடியாது ஏற்பட்டால் ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகவும் கேலிக்குறியாகவும் மாறிவிடும்.
எனவே ஜனாதிபதி, நீதியமைச்சர் ஆகியோர் இவ்விடயத்தில் துரிதமாகச் செயற்பட்டு தமது பணிகளை ஆற்ற வேண்டும். இல்லையேல் இந்த நாட்டை விட்டு மக்கள் ஓடுகின்ற நிலமைதான் ஏற்படும்.
இதற்கமைய ஜனநாயகத்தைத் தொலைத்து விட்டால் இந்த நாட்டில் சர்வாதிகாரம் குடிகொண்டு விடும்.
அதன் பின்னர் காடைத்தனங்கள்தான் கைஓங்கி நிற்கும், இந்நிலையில் கவனமாக செயற்பட்டு இந்த நீதிபதிக்கு ஏற்பட்ட அழுத்தத்தை போக்கக் கூடியதாக ஜனாதிபதி செயற்பட வேண்டும்.'' என தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
