சமாதான நீதவான் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு புதிய வழிமுறை
ஒரு சமாதான நீதவான் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தற்போது முறையான வழிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
இன்றையதினம்(6.3.2026) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசியல் காரணங்களுக்காக இனி சமாதான நீதவான் வழங்கப்படமாட்டாது.
அரசியல் காரணம்
நாடு முழுவதிலும் உள்ள சமாதான நீதவான்களின் தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் ஒரு பிரதியை அத்தாட்சிப்படுத்தும் நபர் உண்மையான சமாதான நீதவான்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இனிவரும் காலங்களில் இப்பதவிக்கான நியமனங்களை வழங்கும்போது, அதிகபட்ச வயது எல்லை 75 வயது வரை மட்டுமே அமையும்.இனி இந்தப் பதவி அரசியல் ரீதியாக வழங்கப்படமாட்டாது.
முறைப்பாடு
கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக இதனை உறுதிப்படுத்தும் நடைமுறை பின்பற்றப்படும்.

தவறிழைக்கும் சமாதான நீதவான்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை நாம் தயார் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 11 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan