புதிய கூட்டணியின் பின்னணியில் பரபரப்பு! கட்சியின் முக்கியஸ்தர்கள் பற்றிய இரகசிய பேச்சுகள்
தற்போது இலங்கையில் புதிய அரசியல் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகள் தீவிரமான நடைபெற்று வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இந்தநிலையிலே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச ஆகியோர் தங்களது அரசியல் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் பரந்த கூட்டணிகளை உருவாக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஐக்கியதேசியக்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இரு தரப்பினரின் தலைமைத்துவத்திலும் அதற்கான ஆர்வம் மந்தமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழுஅமைப்பு, செயலாளர் பதவி, பொருளாளர் நியமனம் போன்ற விடயங்களில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கூட்டணியின் பின்னணி தொடர்பான விடயங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
ராஜபக்சர்களோடு தொடர்புபடும் சர்ச்சைக்குரிய மரணங்கள்! மீண்டும் போர் வெற்றியை கையிலெடுக்கும் மகிந்த தரப்பு