இரகசிய தகவலின் அடிப்படையில் 500 லீட்டர் மண்ணெண்ணெய் உடன் வசமாக சிக்கிய நபர்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே மண்ணெண்ணெய் பதுக்க முயன்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது மண்ணெண்ணெய் பதுக்க பயன்படுத்த பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் சிக்கியுள்ளார்.
கைது
சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணையை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அருகாமையில் இருந்து கொண்டு செல்ல முற்பட்ட போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அவரின் வாகனம் மற்றும் எரிபொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றைய தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam