குற்றவாளிகளுடன் கைகோர்த்த அரசியல்வாதிகளும் தப்ப முடியாது - நீதி அமைச்சர் கடும் எச்சரிக்கை
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில், பாதாள உலகக் குழுக்களுக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் அடியோடு முடிவு கட்டப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றவாளிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில், பாதாள உலகக் குழுக்களுக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் அடியோடு முடிவு கட்டப்படும்.
ஆட்சி உறுதியாக நிலைநிறுத்தப்படும்
நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதியாக நிலைநிறுத்தப்படும். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித தளர்வும் வழங்கப்பட மாட்டாது.
நீதி அமைச்சின் கீழ் செயற்படும் சட்ட அமுலாக்க அமைப்புகள் மேலும் பலப்படுத்தப்படவுள்ளதுடன், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் எந்தவொரு சக்தியும் இனி செயற்பட முடியாத நிலை உருவாக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் கூறினார்.
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தால் சமூகத்தில் ஏற்படும் தீமைகளை முழுமையாக ஒழிப்பதே அரசின் பிரதான இலக்காகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் குற்றவாளிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டார்.
எவரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது
அரசியல் அதிகாரம், செல்வாக்கு அல்லது பதவி ஆகியவற்றை காரணமாகக் கொண்டு எவரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசு, ஊழல், குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மீண்டும் வலியுறுத்திய நீதி அமைச்சர், மக்களின் பாதுகாப்பும் நியாயமும்தான் அரசின் முதன்மை நோக்கம் என்றும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டில் நம்பிக்கையுடனான சமூக சூழல் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam