சி.ஐ.டியில் முறைப்பாட்டை பதிவு செய்த நீதியமைச்சர்
நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) இன்று (16) முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
தமக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அல்லது தனது அரசியல் மீதான நம்பிக்கையை உடைக்கும் நோக்கில் எவரேனும் பொய்யான தகவல்களை உள்ளீடு செய்துள்ளனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
பெயர்களை பதிவேற்றியதில் தவறு
அண்மையில் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் “கலாநிதி ஹர்ஷன நாணயக்கார” என பதிவிடப்பட்டிருந்தமை தொடர்பில் அமைச்சரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அது திருத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெயர்களை பதிவேற்றியதில் தவறு இருப்பதாக நாடாளுமன்ற தலைமைச் செயலகம் கடிதம் அனுப்பியதாகவும் நீதி அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.
எனினும் இது குறித்து தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
