இலங்கையில் காணாமல்போனோருக்கு நீதி கோரி பிரித்தானியாவில் விழிப்புணர்வு நிகழ்வுகள்
இலங்கையில் திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் என பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமற்போனோர் நாள் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது.
உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
பிரித்தானிய தமிழ் மக்கள்
அதன் நிமித்தம் பிரித்தானிய தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக நீதிகோரிய போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது இலங்கை இராணுவத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளை நினைத்து மாபெரும் போராட்டம் பிரித்தானியாவின் Trafalgar Square இல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கவனயீர்ப்பு போராட்டம்
கடந்த வாரம் Trafalgar Square சதுக்கத்தில் அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இணைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தில் பெருமளவான தமிழ் புலம்பெயர் மக்கள் கலந்துகொண்டனர்.
இம்மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நீதிகோரிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
