காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய ஜனநாயகப் போராட்டம்: சாணக்கியன் அழைப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தமிழரசுக்கட்சி தனது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினம் நாளை (30/08/2023) உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போராட்டத்திற்கு பலம் சேர்க்குமாறு கோரிக்கை
அன்றைய தினம் உணர்வுபூர்வமான எமது உரிமைப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு பலம் அளிக்குமாறு உரிமையோடு எமது உறவுகளின் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளுக்கான, நீதி கோரிய ஜனநாயகப் போராட்டமானது சமூக அமைப்புக்களினால் நாளைய
தினம் மு.ப 9.00 மணிக்கு கல்லடிப் பாலத்தில் இருந்து காந்திப்பூங்கா வரை
நடைபவனியாக நடாத்தப்படவுள்ளது.
இதற்கமைய உணர்வுபூர்வமான எமது உரிமைப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு பலம் அளிக்குமாறு உரிமையோடு எமது உறவுகளின் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 52 நிமிடங்கள் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
