திருகோணமலையில் இடம்பெற்ற யூலை கலவரம் நினைவேந்தல் நிகழ்வு
திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தினால் நேற்றை தினம் (27) மாலை திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்னால் யூலை கலவரம் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1983 யூலை 23 முதல் 27 வரையான காலப்பகுதியில் வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி, ஜெகன், தேவன் உட்பட 52 கைதிகள் மற்றும் அதையொட்டிய யூலை கலவரத்தில கொலை செய்யப்பட்ட 3000 பொதுமக்களின் நினைவாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அஞ்சலி உரை நிகழ்த்திய மாநகர சபை உறுப்பினரும், ரெலோவின் மாவட்ட உதவி செயலாளருமாகிய தி.பிரபாதரன் இன்று இந்நாடு பொருளாதாரத்தில் மீட்சிபெற கஸ்டப்படுவதற்கான காரணம் அன்று தமிழர்களும் அவர்களது பொருளாதாரமும் அரசு ஆதரவு காடையர்களின் அழிப்புநடவடிக்கையின் காரணமாவும் அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற யுத்தம் இன்றுவரை அரசு பொருளாதாரத்தில் மீள்வதற்காக 2009 இற்குப் பின்னும் இத்தனை வருடமாகியும் முடியாமலுள்ளது.
நினைவேந்தல்
அன்று தமிழ் மாணவர்கள் அதிகமாக பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுப்பதற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தரப்படுத்தலை தொடர்ந்து ஆரம்பித்த போராட்டம், ஏற்பட்ட ஆயுத யுத்தம் அதானால் ஏற்பட்ட பாரிய உயிர் இழப்புக்கள், அழிவுகள் போன்றதொரு நிலை இனி ஏற்படக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
அதே நேரம் இனியும் இந்நிலை ஏற்படக்கூடாதென கூறி நினைவு அஞ்சலியை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வருகிறோம் எனக் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 3 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
