பொதுமக்களின் போராட்டம்: சமூகத்தின் பெரும்பான்மை பிரிவினரின் ஆதரவை பெற அழைப்பு
‘கோட்டா கோ ஹோம்’மக்கள் போராட்டத்தை ஆதரிக்கும் சிவில் அமைப்பான சர்வபக்ஷிக அரகலகருவோ ‘போராட்டத்தை வென்றெடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு’ பொது மாநாட்டை நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்தது.
இந்த மாநாட்டில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் உட்பட பல எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களின் போராட்டம்
எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சமூகத்தின் பெரும்பான்மை பிரிவினரின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டின் போது சர்வபக்ஷிகா அரகலகருவோ சிவில் அமைப்பு 4 அம்ச முன்மொழிவையும் சமர்பித்தனர்.
சமகி ஜன பலவேகய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன்,நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
நாளை மற்றும் நாளை மறுதினம் நிலைமை மாறலாம்! கொழும்பில் குவிக்கப்படும் அதிரடிப்படையினர் - பாதுகாப்பு தீவிரம் |




ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
