டயனா கமகே தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதி பேராணை மனு திகதியிடல்
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதி பேராணை மனுவை விசாரணைக்கு அழைக்க திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.
இதன்போது, அந்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ்,
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாட்டின் குடியுரிமை அற்றவர் எனவும், இலங்கை
குடியுரிமை அற்ற அவர் நாட்டின் பொறுப்பு வாய்ந்த பதவியை வகிப்பது சட்டத்திற்கு
முரணானது என்றும் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
