நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சி
நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சிக்கப்படுவதாக நீதித்துறை சேவை சங்கம் எச்சரித்துள்ளது.
நீதித்துறை குறித்து பொய்யானதும் ஆதாரமற்றதும் ஆகிய விமர்சனங்கள் பரவுவது, பொதுமக்களின் நீதித்துறை குறித்த நம்பிக்கையை சீர்குலைப்பதுடன், நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் கடும் அச்சுறுத்தலாக அமைகிறது என சுட்டிக்காட்டியுள்ளது.
நீதித்துறை சேவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தவ ிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையை பாதிக்கவும், அதன் செயல்பாடுகளில் தலையிடவும் நோக்கம்கொண்ட குறிப்பிட்ட, திட்டமிட்ட மற்றும் நாசகார முயற்சிகள் நடைபெறுவதாக சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கு மீது கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட முயலும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சங்கம் தயங்காது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.