காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கான தீர்ப்பு ஒத்திவைப்பு (photos)
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி அறிவிக்கப்படும் என வவுனியா மேல் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம்
"யுத்தத்தின் கடைசிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்டோர் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் சம்பந்தமான வழங்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட இருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் 7 ஆம் மாதம் முதலாம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி இரட்ணவேல் “ ஜுலை மாதம் முதலாம் திகதி நாம் தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.


உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam