உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்கமுடியாது! மகிந்த ராஜபக்ச - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தவறாகக் கையாண்டமைக்குத் நானும் அரசில் அங்கம் வகிக்கும் பலரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக அண்மையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நாட்டின்முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகத்துக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தீர்ப்பை ஏற்கமாட்டேன் எனவும், வாய்ப்புக் கிடைக்கும்போது அதற்கான காரணங்களை விளக்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்சி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படும் எனவும், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் மகிந்த மேலும் கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam