காணிப்பிரச்சினை தொடர்பான வழக்கு: 52 வருடங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பு
குருநாகலில் உள்ள 90 பேர்ச் காணிப்பிரச்சினை தொடர்பில் 52 வருடங்களாக நீதிமன்றங்களின் விசாரணைக்கு உள்ளாகியிருந்த வழக்கிற்கான தீர்ப்பு 52 வருடங்களின் பின் உயர்நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முதன்முதலில் 1972ஆம் ஆண்டு குருநாகல் மாவட்ட நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது.
பிரதிவாதியை இந்தக் காணியிலிருந்து வெளியேற்றுதல், உடைமை மற்றும் சேதங்களை மீட்டெடுத்தல் என்பனவற்றிற்காக முதன்முதலில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
பிரதிவாதி
இந்த நிலையில் 1976ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி குருநாகல் மாவட்ட நீதிமன்றம் வாதிக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து, மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதிவாதி மனு தாக்கல் செய்தார்.
1984 அக்டோபர் 25, அன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்ததுடன், மாவட்ட நீதிமன்ற நீதிபதி பல ஆவணங்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளாததன் அடிப்படையில் வழக்கை புதிய விசாரணைக்காக திருப்பி அனுப்பியது.
இதனையடுத்து, இரண்டாவது விசாரணையைத் தொடர்ந்து, மாவட்ட நீதிமன்றம், 1997 ஏப்ரல் 28 அன்று வாதிக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியது.
எனினும் பிரதிவாதி பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய விரும்பினார்.
மேன்முறையீடு
இந்த நிலையில் 2011 டிசம்பர் 02ஆம் திகதியன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியின் மரணத்தைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மற்றுமொருவர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.
இதனையடுத்து 2012 மே 6ஆம் திகதியன்று இந்த வழக்கில் மேன்முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனடிப்படையில் இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் மாற்று வாதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |