இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்துக்கான தேவை 03 முதல் 04 ஜிகாவோட் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நாட்களில் நீர் மின் உற்பத்தி 21 வீதமாகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த கூறியுள்ளார்.
தற்போது நீர் மின்னுற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 83 சதவீதமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு அறிவுறுத்தல்
இதேவேளை, சூரியசக்தி மூலம் 4.5 வீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை மூலம் 05 வீத மின்சாரம் உற்பத்தியாகின்றது. 64 வீத மின்சாரம் அனல் மின் உற்பத்தி மூலம் பெறப்படுகின்றது.

இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam