ஊடகவியலாளர்கள் இடர்காலங்களில் எரிபொருளை தடையின்றி பெறமுடியும்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
இடர்காலங்களில் எரிபொருளைத் தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் உள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இன்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உங்களது பகுதியில் உள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் தலைமைக் காரியாலயத்தில் விண்ணப்ப கடிதம் ஒன்றை சமர்பிக்குமிடத்து மாதாந்த கோட்டா அடிப்படையில் எரிபொருளைத் தடையின்றி பெற்றுக் கொள்ள முடியும்.
தொடர்ச்சியாக நீங்கள் குறித்த நிலையத்திலேயே எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டும். இடர்காலம் வரும் போது மாத்திரம் இச் சலுகையைப் பெறமுடியாது.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு ஒரு இருப்பு உள்ளது போல ஊடகவியலாளர்களும்
இவ் இருப்பில் பெறமுடியும். அதற்காக உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் ஒன்றினூடாக
விண்ணப்பக் கடிதத்தை சமர்ப்பிக்கவும் என
மாவட்ட அரச அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.