ஊடகவியலாளர்கள் மனித உரிமைகளை பேணுகின்ற சிறந்த அந்தஸ்தை பெறுபவர்கள்! ம.உ ஆணைக்குழுவின் இணைப்பாளர்
1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் 3 ஆம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமையில் 14 ஆம் உறுப்புரிமையில் கூறப்பட்ட கருத்து வெளியிடும் சுதந்திரத்தை இல்லாமல் ஆக்க முனைப்புடன் செயற்பட்டவர்கள் மனித உரிமைகளை மீறியவர்களாவர் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சித்திரவதைகளுக்கெதிரான தினத்தையொட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பொலிஸ் மற்றும் அரச அரசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஊடகவியலாளர்கள் மனித உரிமைகளை பேணுகின்ற சிறந்த அந்தஸ்தை பெறுபவர்களாக இருக்கின்றார்கள். ஒரு நாட்டில் நடைபெறுகின்ற சம்பவங்கள் ஒரு தனி மனிதனுக்கு ஏற்பட்ட சம்பவங்கள் ஒரு சமூகத்திற்கு ஏற்படுகின்ற அசம்பாவிதங்கள் அல்லது அரசியல் ரீதியான மாற்றங்கள் பொதுமக்களின் கருத்துக்களை வெளியிடுபவர்கள்.
அவர்களை கொலை செய்தும் மிரட்டியும் காணாமல் போகச் செய்தும் இருக்கின்ற விடயங்கள் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு செய்கின்ற ஒரு அநியாயமாகும்.கடந்த காலங்களில் இடம்பெற்ற ஒரு ஒடுங்கு முறை என்றே கூற முடியும். ஊடகவியலாளர்கள் மனித உரிமைகளை பேணுகின்ற சிறந்த அந்தஸ்தை பெறுபவர்களாக இருக்கின்றார்கள்.
ஒரு நாட்டில் நடைபெறுகின்ற சம்பவங்கள் ஒரு தனி மனிதனுக்கு ஏற்பட்ட சம்பவங்கள் ஒரு சமூகத்திற்கு ஏற்படுகின்ற அசம்பாவிதங்கள் அல்லது அரசியல் ரீதியான மாற்றங்கள் பொதுமக்களின் கருத்துக்களை வெளியிடுபவர்கள் தான் இந்த ஊடகவியலாளர்கள் இந்த ஊடகவியலாளர்களின் கருத்து சுதந்திரத்தை 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் 3 ஆம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமையில் 14 ஆம் உறுப்புரிமையில் கூறப்பட்ட கருத்து வெளியிடும் சுதந்திரத்தை இல்லாமல் ஆக்க முனைப்புடன் செயற்பட்டவர்கள் மனித உரிமைகளை மீறியவர்களாவர்.
மனித உரிமை
அவர்களை கொலை செய்தும் மிரட்டியும் காணாமல் போகச் செய்தும் இருக்கின்ற விடயங்கள் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு செய்கின்ற ஒரு அநியாயமாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஒரு ஒடுங்கு முறை என்றே கூற முடியும்.ஊடக சுதந்திரம் என்பது இந்த மக்களுக்கு பொதுவாக இருக்க வேண்டும்.
குறிப்பாக ஊடகத்தை மையப்படுத்தி செய்கின்ற ஆக்கிரமிப்புக்கள் இன்று ஊடகங்களாக சமூக வலைத்தளங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் அச்சு ஊடகங்கள் என பரவலாக இருக்கின்றன.
ஆனால் பொய்யான வதந்திகளை பரப்பி ஒரு சமூகத்தை இலக்கு வைத்து ஒரு அரசியலுக்காக மேற்கொள்ளப்படுகின்ற அந்த ஊடகம் அந்த ஊடகத்தில் தொழில்புரிகின்றவர்கள் ஒரு மனித உரிமை பாதுகாவலர்கள் என்ற வலைக்குள் உள்வாங்கப்படுகின்றார்கள் அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
முக்கிய பணி
ஏனெனில் முக்கியமாக மனித உரிமை பற்றிய மீறல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மீறல்களை ஆவணப்படுத்தல் இதனை ஆதரித்து குரல் எழுப்புதல் போன்றவை மனித உரிமை பாதுகாவலர்களின் முக்கிய பணியாக இருக்கின்றது.
அதை தான் ஊடகங்கள் செய்து வருகின்றது. மனித உரிமையை பாதுகாப்பதற்கு அரசு ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு அரசுக்கான கடப்பாடு ஒரு மனித உரிமை பாதுகாவலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் என்பவற்றின் அடிப்படையில் 2020 ஜனவரி முதல் 2023 மார்ச் மாதம் வரையான காலப் பகுதியில் இலங்கை பொலிசாருடன் தொடர்புபட்ட தடுப்புக் காவல் மரணங்கள் 49 அவதானிக்கப்படடுள்ளன.
தனி மனிதன்
பொலிஸ் பாதுகாப்பில் உள்ளவர்கள் மற்றும் பொலிசாருடனான மோதல்களின் போது ஏற்பட்ட மரணங்களை தடுப்பது டர்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை பொலிசாருடனான 2025ம் ஆண்டின் முதலாம் இலக்க பொது வழிகாட்டுதல்களும் பரிந்துரைகளும் வெளியிட்டுள்ளதால் அது பற்றி அனைவர்களும் அறிந்து கொள்வது அவசியமாகும். இலங்கை அரசியல் அமைப்பின் 13(4) ஆம் உறுப்புரையில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உயிர்வாழ்வதற்கான உரிமை இலங்கையிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் உரித்தான ஓர் உள்ளார்ந்த உரிமையாகும்.
கைது செய்யப்பட முன்னரும் கைது செய்யப்படுகின்ற போதும் கைது செய்யப்பட்ட பின்னருமான பாதுகாப்பு ஒரு தனி மனிதனுக்கு இருக்கிறது.
அத்துடன் சந்தேக நபரான பெண் ஒருவரை திட்டமிட்டு கைது செய்கின்ற போது பொலிஸ் அலுவலர்களின் அணியில் ஒரு பெண் உத்தியோகத்தர் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதுடன் புலனாய்வுத் தகவல்கள் தொடர்பாக அதிகூடிய இரகசியத் தன்மையை பேணுவது தொடர்பில் உத்தரவாதமளித்தல் வேண்டும்”என்றார்.

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
