ஊடகவியலாளர் பிரகாஷின் பூதவுடல் சுகாதார முறைப்படி தகனம்
கோவிட் தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் பூதவுடல் இன்று சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகத் தகனம் செய்யப்பட்டுள்ளது.
கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது 26) கோவிட் தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த வாரம் 2ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது பூதவுடலானது இன்றைய தினம் யாழ். கோம்பயன் மயானத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக மின் தகனம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சுயாதீன ஊடகவியலாளரான பிரகாஷ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலைக் கல்வியை இடை நிறுத்திக் கொண்டார்.
இந்த நிலையிலும் அவற்றையெல்லாம் தாண்டி அவர் ஊடகத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam