படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் - 26ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிம்மலராஜனின் 26 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுகள், இன்று(21.10.2026) சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் அதன் தலைவர் சி.த.காண்டீபன் தலைமையில் இன்று மதியம் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், முதல் நிகழ்வாக மயில்வாகனம் நிம்மலராஜனின் திரு உருவப்படத்திற்கான ஈகை சுடரினை ஊடகர் சி.த.காண்டீபன் ஏற்றி வைக்க மலர் மாலையினை ஊடகர் R.K.ரெஜி அணிவித்துள்ளார்.
மலரஞ்சலி செலுத்திய உறுப்பினர்கள்
இதனைத் தொடர்ந்து, மலர் அஞ்சலியினை மகளிர் சமூக செயற்ப்பாட்டாளர் கஜா ஆரம்பித்து வைக்க, நிகழ்வில் கலந்துகொண்ட சமூக மாற்றத்திற்கான ஊடக மைய ஊடகர்கள், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், உறுப்பினரும் பருத்தித்துறை நகரசபை உறுப்பினருமான ஜெயானந்தம் ஜெயகோபி, ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், சமூக செய்யற்பாட்டாளர்கள் என பலரும் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இங்கு நினைவுரை ஆற்றிய சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தின் தலைவர் சி.த.காண்டீபன் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், இலங்கையிலே மாறி மாறி வந்த எந்த அரசாங்கங்கள் எல்லாமே படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியான ஓரு விசாரணையை மேற்கொள்ள பின்னாடிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே போன்று, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்றால் ஒரு சர்வதேச பொறிமுறையுடனான விசாரணையே மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகர் மயில்வாகனம் நிமலராஜனின் உடனிருந்த மூத்த ஊடகர் வெளிப்பிள்ளை தவச்செல்வம் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.

மகிந்தவின் உயிரைப் பறிக்கும் பாரிய சதித் திட்டம்! நீதிமன்ற சாட்சியத்தை அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர