கிளிநொச்சியை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார்
கிளிநொச்சியை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக இன்று (03-07-2025)காலை உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த நடராசா கிருஸ்ணகுமார், கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை வானொலி வர்த்தக சேவையான தமிழீழ வானொலியின் அலுவலக செய்தியாளராகவும் நிகழ்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், இவர், பல்வேறு நெருக்கடிகள், விமானக் குண்டு வீச்சுக்கள் மற்றும் எறிகணை வீச்சுக்கள் என்பனவற்றுக்கு மத்தியில் ஊடகவியலாளராக பணியாற்றியவர்.
சிறுநீரக நோய்
2010ஆம் ஆண்டுமுதல் தினக்குரல் வலம்புரி தினகரன் தமிழ்மிரர் உள்ளிட்ட ஊடகங்களின் கிளிநொச்சி செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.

நீண்ட காலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு 52ஆவது வயதில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri